அல்ஜாரி ஜோசப்
அல்ஜாரி ஜோசப் கோப்புப் படம்

அல்ஜாரி ஜோசப் 2 போட்டிகளில் விளையாட தடை!

மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் அல்ஜாரி ஜோசப் ஆடுகளத்தைவிட்டு வெளியேறியதற்கு 2 போட்டிகளில் விளையாட தடை.
Published on

இங்கிலாந்து அணி உடனான 3ஆவது போட்டியில் மே.இ.தீ. அணியின் வீரர் அல்ஜாரி ஜோசப் 4ஆவது ஓவரில் ஃபீல்டிங் அமைப்பது குறித்து கேப்டனுடன் (ஷாய் ஹோப்) கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அந்த ஓவரில் விக்கெட் எடுத்தும் அவர் அதைக் கொண்டாடவில்லை. அந்த ஓவர் முடிந்ததும் 5ஆவது ஓவரில் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். 10 ஃபீல்டர்களுடன் மே.இ.தீ. அணி விளையாடியது.

பின்னர் கோபம் தணிந்த பிறகு 6ஆவது ஓவரில் ஆடுகளத்துக்கு வந்தார் அல்ஜாரி ஜோசப். இந்தப் போட்டியில் அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதற்கு மே.இ.தீ. அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சமி, “இந்தமாதிரியான நடத்தைகள் ஏற்றுக்கொள்ளதக்கதல்ல” என்றார்.

2-1 என மே.இ.தீ. அணி தொடரை வென்றது. அடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மே.இ.தீவுகள் இங்கிலாந்து அணியுடன் விளையாடவிருக்கிறது.

இந்நிலையில், கிரிக்கெட் வெஸ்ட் இண்டிஸ் 2 போட்டிகளில் விளையாட தடைவிதித்துள்ளது. இதனால் டி20 போட்டிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அல்ஜாரி ஜோசப், “எனது ஆர்வம்தான் என்னுடைய சிறந்த செயல்பாடுகளைக் கொண்டுவருவதாக என்னுகிறேன். ஷாய் ஹோப்பிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டேன். மேலும் எனது அணியினர், அணிக் குழுவினரிடமும் வருத்தம் தெரிவித்தேன். மே.இ.தீவுகள் அணியின் ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எதாவது மனசங்கடம் ஏற்பட்டிருந்தால் மிகவும் மிகவும் வருந்துகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com