விராட் கோலியின் ஃபார்மை வைத்து அவரை மதிப்பிடாதீர்கள்: ரிக்கி பாண்டிங்

விராட் கோலியின் தற்போதைய ஃபார்மை வைத்து அவரை மதிப்பிடாதீர்கள் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி, ரிக்கி பாண்டிங் (கோப்புப் படம்)
விராட் கோலி, ரிக்கி பாண்டிங் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

விராட் கோலியின் தற்போதைய ஃபார்மை வைத்து அவரை மதிப்பிடாதீர்கள் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடர் வருகிற நவம்பர் 22 முதல் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஃபார்ம் பேசுபொருளாகியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக அண்மையில் நிறைவடைந்த டெஸ்ட் தொடரில், இருவரும் மிகவும் சராசரியான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.

ரிக்கி பாண்டிங் நம்பிக்கை

பார்டர் - கவாஸ்கர் தொடர் நெருங்கும் நிலையில், விராட் கோலியின் தற்போதைய ஃபார்மை வைத்து அவரை மதிப்பிடாதீர்கள் எனவும், பார்டர் - கவாஸ்கர் தொடரில் அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐசிசியில் அவர் பேசியதாவது: விராட் கோலியின் திறமை குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய அவசியமில்லை என ஏற்கனவே கூறியிருக்கிறேன். அவரது திறமையின் மீது எந்தவொரு சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவதை அவர் விரும்புவார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவதை மிகவும் விரும்புவார் என்பது எனக்குத் தெரியும். ஆஸ்திரேலிய மண்ணில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் விராட் கோலி மீண்டும் அவரது பழைய ஃபார்முக்குத் திரும்புவார் என நம்புகிறேன். முதல் போட்டியிலேயே அவர் அதிக அளவில் ரன்கள் குவித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் அவர் 3 சதங்களை மட்டுமே அடித்துள்ளார் என்ற புள்ளிவிவரத்தை பார்த்தேன். அது சரியாக இருப்பதாக தெரியவில்லை. ஆனால், அது சரி என்றால் அதற்கு கவனம் கொடுக்க வேண்டும் என்றார்.

கடந்த 10 ஆண்டுகளில் விராட் கோலி முதல் முறையாக ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் இடம்பிடிக்கத் தவறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com