
இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்த வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், தனது கிரிக்கெட் பயணத்தை இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடிவுக்கு கொண்டு வந்தார். அவரது இந்த சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் இங்கிலாந்து அணிக்காக மிகவும் வெற்றிகரமான பந்துவீச்சாளராக அவர் செயல்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன், 704 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களில் முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்னேவுக்கு அடுத்தபடியாக ஆண்டர்சன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
ஆச்சரியப்பட ஒன்றுமில்லை
ஐபிஎல் மெகா ஏலம் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், ஜேம்ஸ் ஆண்டர்சனை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜேம்ஸ் ஆண்டர்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஸ்விங் பந்துவீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அவர்களது அணியில் எப்போதும் ஸ்விங் பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள். அதனால், ஜேம்ஸ் ஆண்டர்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டால், அது எனக்கு பெரிய ஆச்சரியத்தை கொடுக்காது என்றார்.
இதையும் படிக்க: கேப்டன் பொறுப்பு பும்ராவுக்கு கடினமாக இருக்கும்: ரிக்கி பாண்டிங்
1500-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஐபிஎல் மெகா ஏலத்துக்காக தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். ஐபிஎல் மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.