
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மீதமுள்ள 3 போட்டிகளில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் மற்றும் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் கணுக்கால் காயத்தால் விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - மேற்கிந்திய தீவு அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இதில் இதுவரை இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் அதில் இரண்டிலும் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
பார்படாஸில் நடத்த முதல் ஆட்டத்தில் போது ஆண்ட்ரே ரஸ்ஸல் கணுக்காலில் காயமடைந்தார். அதன்பின்னர் காயத்தால் அவதிப்பட்ட அவர் 2-வது போட்டியில் விளையாடவில்லை.
தொடரை தக்கவைக்க மேற்கிந்திய தீவுகள் அணி மூன்றாவது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மேலும், அவருக்குப் பதிலாக ஆல்-ரவுண்டர் சமர் ஸ்பிரிங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒருநாள் போட்டியின் போது கேப்டன் ஷாய் ஹோப்புடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மைதானத்தில் இருந்து வெளியேறிய பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப் இரண்டு போட்டிகளில் இருந்து விளையாட தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
இவ்விரு அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி நாளை(நவ.14) செயிண்ட் லூசியாவில் நடைபெறவுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் விவரம்
ரோமன் பவல்(கேப்டன்), ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டே, ஷிம்ரன் ஹெட்மயர், டெரென்ஸ் ஹிண்ட்ஸ், ஷாய் ஹோப், அகேல் ஹொஸைன், அல்ஜாரி ஜோசப், பிரண்டன் கிங், எவின் லீவிஸ், குடகேஸ் மோட்டி, நிகோலஸ் பூரன், ரூதர்போர்ட், ரோமாரியோ ஷெஃபர்ட், ஷமர் ஸ்ப்ரிங்கர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.