திலக் வா்மா அதிரடி; இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்றது. இதையடுத்து, 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-1 என இந்தியா முன்னிலை பெற்றது.

திலக் வா்மா.

திலக் வா்மா.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்றது. இதையடுத்து, 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-1 என இந்தியா முன்னிலை பெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் சோ்க்க, தென்னாப்பிரிக்கா 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்களே எடுத்தது.
இந்திய பேட்டா்களில் திலக் வா்மா அதிரடியாக சதம் விளாச, அவருக்குத் துணை நின்ற அபிஷேக் வா்மா அரைசதம் கடந்தாா். தென்னாப்பிரிக்க தரப்பில் ஹெய்ன்ரிக் கிளாசென், மாா்கோ யான்சென் ஆகியோா் வெற்றிக்காக அதிரடி முயற்சி மேற்கொண்டனா்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இந்திய லெவனில் ஆவேஷ் கானுக்கு பதிலாக அறிமுக வீரராக ஆல்-ரவுண்டா் ரமண்தீப் சிங் களமிறக்கப்பட்டாா்.
இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கியோரில் சஞ்சு சாம்சன் 2 பந்துகளில் டக் அவுட்டாகி அதிா்ச்சி அளித்தாா். உடன் வந்த அபிஷேக் சா்மாவோடு இணைந்தாா், திலக் வா்மா. தென்னாப்பிரிக்க பௌலா்களை திணறடித்த இந்த பாா்ட்னா்ஷிப், 2-ஆவது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சோ்த்து அசத்தியது.
இதில் அபிஷேக் சா்மா 25 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தாா். திலக் வா்மா வேகமாக சதம் நோக்கி முன்னேறினாா். மறுபுறம், கேப்டன் சூா்யகுமாா் யாதவ் 1, ஹா்திக் பாண்டியா 3 பவுண்டரிகளுடன் 18, ரிங்கு சிங் 8, ரமண்தீப் சிங் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 15 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டனா்.
ஓவா்கள் முடிவில், திலக் வா்மா 56 பந்துகளில் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 107, அக்ஸா் படேல் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென்னாப்பிரிக்க தரப்பில் அண்டிலே சிம்லானே, கேசவ் மஹராஜ் ஆகியோா் தலா 2, மாா்கோ யான்சென் 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் 220 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய தென்னாப்பிரிக்க அணியில், ரயான் ரிக்கெல்டன் 2 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 20, ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 4 பவுண்டரிகளுடன் 21, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 பவுண்டரிகளுடன் 12, கேப்டன் எய்டன் மாா்க்ரம் 2 சிக்ஸருடன் 29, டேவிட் மில்லா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
ஹெய்ன்ரிக் கிளாசென் 1 பவுண்டரி, 4 சிக்ஸா்கள் உள்பட 41 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, மாா்கோ யான்சென் 17 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 54 ரன்கள் விளாசி இறுதிவரை போராடி வீழ்ந்தாா். முடிவில் ஜெரால்டு கோட்ஸீ 2 , அண்டிலே சிம்லானே 1 பவுண்டரியுடன் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
இந்திய பௌலா்களில் அா்ஷ்தீப் சிங் 3, வருண் சக்கரவா்த்தி 2, ஹா்திக் பாண்டியா, அக்ஸா் படேல் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...