இந்திய கிரிக்கெட்டை பாதுகாப்பான கைகளில் ஒப்படைத்த ரோஹித், விராட்; முன்னாள் வீரர் பதிவு!

டி20 போட்டிகளில் இளம் இந்திய அணி சிறப்பாக செயல்படுவதை நினைத்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
விராட் கோலி - ரோஹித் சர்மா
விராட் கோலி - ரோஹித் சர்மாபடம் | பிசிசிஐ
Published on
Updated on
2 min read

டி20 போட்டிகளில் இளம் இந்திய அணி சிறப்பாக செயல்படுவதை நினைத்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு, மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் தங்களது ஓய்வு முடிவை அறிவித்தனர். மூத்த வீரர்களின் ஓய்வுக்குப் பிறகு டி20 போட்டிக்கான இந்திய அணியில் இளம் வீரர்கள் பலரும் இடம்பிடித்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

ரோஹித் சர்மாவின் ஓய்வுக்குப் பிறகு, இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார். அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா போன்ற வீரர்கள் பலரும் இடம்பெற்று அதிரடியாக விளையாடி அசத்தி வருகின்றனர்.

பாதுகாப்பான கைகளில் இந்திய கிரிக்கெட்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி அசத்தி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட்டினை பாதுகாப்பான கைகளில் ஒப்படைத்துள்ளதை நினைத்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

முகமது கைஃப் (கோப்புப் படம்)
முகமது கைஃப் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: தென்னாப்பிரிக்க ஆடுகளங்களின் கடுமையான சூழல்களில் திலக் வர்மா, அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவிப்பதை நினைத்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் கண்டிப்பாக மகிழ்ச்சியாக இருப்பார்கள். டி20 போட்டிகளை பொருத்தவரையில், இந்திய அணியை அவர்கள் பாதுகாப்பான கைகளில் ஒப்படைத்துள்ளார்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரை 4-1 எனக் கைப்பற்றியது. அதன் பின், டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களை 3-0 எனக் கைப்பற்றி அசத்தியது.

4 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com