வெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

இலங்கை, பாகிஸ்தான் தொடர்களிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் விலகல்!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் தொடர்களிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் விலகல்.

தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் - படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Published On :

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் தொடர்களிலிருந்து தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி விலகியுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி அதன் சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் விளையாடவுள்ளது.

காயம் காரணமாக விலகல்

சொந்த மண்ணில் அடுத்தடுத்து தொடர்கள் வரவிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான லுங்கி இங்கிடி காயம் காரணமாக விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

காயத்திலிருந்து மீண்டு அடுத்த ஆண்டு ஜனவரியில் லுங்கி இங்கிடி மீண்டும் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடர்களிலிருந்து அவர் விலகியுள்ளார். இதனை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்க அணி 54.17 சதவிகித வெற்றிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. இலங்கை அணி 55.56 சதவிகித வெற்றிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற இரு அணிகளுக்கும் இந்த டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானதாகும்.

இதுவரை தென்னாப்பிரிக்க அணிக்காக 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள லுங்கி இங்கிடி 55 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.