2-வது டி20: பாகிஸ்தானுக்கு 148 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் குவித்துள்ளது.
கிளன் மேக்ஸ்வெல்
கிளன் மேக்ஸ்வெல்படம் | AP
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் குவித்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.

ஆஸ்திரேலியா - 147/9

டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூ ஷார்ட் 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அதிகபட்சமாக ஆரோன் ஹார்டி 28 ரன்களும், மேக்ஸ்வெல் 21 ரன்களும் எடுத்தனர்.

ஹாரிஸ் ரௌஃப்
ஹாரிஸ் ரௌஃப்படம் | AP

பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரௌஃப் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அப்பாஸ் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும், சூஃபியான் முக்யூம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com