இந்திய அணிக்கு வலிமை சேர்க்க மூத்த வீரர் வந்துவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. பார்டர் - கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் தனது பயிற்சியை ஏற்கனவே தொடங்கிவிட்டது.
மீண்டும் முகமது ஷமி
இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடினார். அந்தத் தொடரின்போது அவருக்கு காயம் ஏற்பட, அதன் பின் அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.
இதையும் படிக்க: இந்தியாவை வெல்ல உதவிய நியூசி. வீரருக்கு அணியில் இடமில்லை!
இந்த நிலையில், நீண்ட நாள்களுக்குப் பிறகு முகமது ஷமி முழுவீச்சில் பந்துவீசத் தொடங்கியுள்ளார். பெங்கால் அணிக்காக ரஞ்சி கோப்பைத் தொடரில் விளையாடிய முகமது ஷமி, மத்திய பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் 19 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
காயம் காரணமாக கடந்த ஓராண்டாக அணியில் இடம்பெறாமலிருந்த முகமது ஷமி, பார்டர் - கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியுடன் விரைவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரவி சாஸ்திரி கூறியதென்ன?
முகமது ஷமி முழுவீச்சில் பந்துவீசத் தொடங்கியுள்ள நிலையில், பார்டர் - கவாஸ்கர் தொடரில் அவர் இந்திய அணியுடன் இணைவது தொடர்பாக அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

முகமது ஷமி (கோப்புப் படம்)
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பக்க பலமாக பந்துவீச்சில் ஆதரவு தேவைப்படுகிறது. முகமது ஷமி காயத்திலிருந்து மீண்டு மீண்டும் முழுவீச்சில் பந்துவீசத் தொடங்கியுள்ளார். அவர் முழு உடல் தகுதியுடன் பார்டர் - கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியுன் இணைவது அணிக்கு பலம் சேர்ப்பதாக அமையும் என்றார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என இரு அணிகளுக்குமே இந்த டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானதாகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்திய அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன.
ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 2018-2019 ஆம் ஆண்டு இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றபோது, முகமது ஷமி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அந்த தொடரில் 4 போட்டிகளில் அவர் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதுவரை இந்திய அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முகமது ஷமி 229 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லக்னௌவுக்கு எதிரான தோல்வி சிஎஸ்கேவுக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கும்: ரவி சாஸ்திரி

இந்திய டி20 கேப்டனாக சஞ்சு சாம்சன் வரவேண்டும் - ரவி சாஸ்திரி

சந்தேகப்பட்டவர்களை சதத்தால் அமைதியாக்கிய விராட் கோலி; முன்னாள் கேப்டன் பாராட்டு!

இது வெறும் ஆரம்பம் மட்டுமே; முகமது ஷமியை பாராட்டிய முன்னாள் வீரர்!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

