இந்தியாவை வெல்ல உதவிய நியூசி. வீரருக்கு அணியில் இடமில்லை!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல காரணமாக இருந்த நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அணியில் சேர்க்கப்படவில்லை.
இந்தியாவை வெல்ல உதவிய நியூசி. வீரருக்கு அணியில் இடமில்லை!
படம் | நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Published on
Updated on
2 min read

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல காரணமாக இருந்த நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் சேர்க்கப்படவில்லை.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அண்மையில் விளையாடியது. இந்த டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்தது. நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர். அதிலும் குறிப்பாக, சுழற்பந்துவீச்சாளர்களான மிட்செல் சாண்ட்னர் மற்றும் அஜாஸ் படேல் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.

அஜாஸ் படேல் இல்லை

இங்கிலாந்து அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் நவம்பர் 28 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

அஜாஸ் படேல்
அஜாஸ் படேல்படம் | நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (நவம்பர் 15) அறிவித்துள்ளது. அந்த அணியில் இந்தியாவுக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்துவீசி 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஜாஸ் படேல் சேர்க்கப்படவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 14 பேர் கொண்ட நியூசிலாந்து அணியில், பிரதான சுழற்பந்துவீச்சாளராக மிட்செல் சாண்ட்னர் இடம்பெற்றுள்ளார். அதேபோல, ஆல்ரவுண்டரான கிளன் பிளிப்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் இடம்பெறாமலிருந்த கேன் வில்லியம்சன் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியைக் கேப்டனாக வழிநடத்திய டாம் லாதம், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் நியூசிலாந்து அணியின் கேப்டனாக செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியில் அன்கேப்டு ஆல்ரவுண்டரான நாதன் ஹாரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான நியூசி. அணி விவரம்

டாம் லாதம் (கேப்டன்), டாம் பிளண்டல், டெவான் கான்வே, ஜேக்கோப் டஃபி, மாட் ஹென்றி, டேரில் மிட்செல், வில்லியம் ஓ’ரூர்க், கிளன் பிளிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், நாதன் ஹாரிஸ், டிம் சௌதி, கேன் வில்லியம்சன் மற்றும் வில் யங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com