நியூசி. அணி நன்றாக விளையாடியது; இலங்கை தலைமைப் பயிற்சியாளர் பாராட்டு!
படம் | நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

நியூசி. அணி நன்றாக விளையாடியது; இலங்கை தலைமைப் பயிற்சியாளர் பாராட்டு!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியதாக இலங்கை அணியின் பயிற்சியாளர் பாராட்டியுள்ளார்.
Published on

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியதாக இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா பாராட்டியுள்ளார்.

நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் சமனில் முடிந்த நிலையில், ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

நியூசிலாந்துக்கு பாராட்டு

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற பிறகு, நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டதாக இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இலங்கையில் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசித்தோம். தோல்விகளை எங்களால் சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. நியூசிலாந்து அணி சில முக்கிய வீரர்களின்றி விளையாடினாலும், அவர்களிடம் நல்ல அணி இருக்கிறது. அவர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com