ஜெய்ஸ்வால்
ஜெய்ஸ்வால்படம்: ஏபி

மெக்கல்லம் சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி வருகிறார்.
Published on

ஓராண்டில் டெஸ்ட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் பட்டியலில் நியூசிலாந்தின் அதிரடி வீரரும் தற்போதைய இங்கிலாந்தின் பயிற்சியாளருமான பிரண்டன் மெக்கல்லம் சாதனையை முறியடித்துள்ளார் இளம் இந்திய வீரர் ஜெய்ஸ்வால்.

இந்தாண்டில் 34 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார் ஜெய்ஸ்வால். இதற்கு முன்பாக மெக்கல்லம் 2014இல் 33 சிக்ஸர்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பத்தாண்டுகளாக யாரும் முறியடிக்காமல் இருந்த சாதனையை ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ஆஸிக்கு இடையேயான முதல் டெஸ்ட் பெர்த்தில் நேற்று (நவ.22) தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150க்கு ஆல் அவுட் ஆக, ஆஸி. 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தற்போது, இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 166 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடி வருகிறது.

ஜெய்ஸ்வால் 88, கே.எல்.ராகுல் 59 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள்.

டெஸ்ட்டில் ஓராண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள்

1. யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 34 (2024)

2. பிரண்டன் மெக்கல்லம் - 33 (2014)

3. பென் ஸ்டோக்ஸ் - 26 (2022)

4. ஆடம் கில்கிறிஸ்ட் - 22 (2005)

5. வீரேந்தர் சேவாக் - 11 (2008)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com