தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஐபிஎல் தொடரில் அதிகமான ஆப்கன் வீரர்கள்..! ரஷித் கான் நெகிழ்ச்சி!

ஆப்கன் சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான் இந்த ஐபிஎல் தொடரில் அதிகமான ஆப்கானிஸ்தான் வீரர்கள் தேர்வாகியுள்ளது மகிழ்ச்சியெனக் கூறியுள்ளார்.

News image

ரஷித் கான்

படம் | AP

Updated On :27 நவம்பர் 2024, 1:08 pm

DIN

ஆப்கன் சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான் இந்த ஐபிஎல் தொடரில் அதிகமான ஆப்கானிஸ்தான் வீரர்கள் தேர்வாகியுள்ளது மகிழ்ச்சியெனக் கூறியுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் 2017இல் முதன்முதலாக ஐபிஎல் போட்டிக்கு தேர்வானார் ரஷித் கான். ஐபிஎல்-க்கு தேர்வான முதல் ஆப்கன் வீரரும் அவர்தான். அவரைத் தொடர்ந்து பல வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்கள்.

சிஎஸ்கே அணியில் நூர் அகமது, அல்லாஹ் கசான்ஃபர் மும்பை அணியிலும் தேர்வாகியுள்ளார். முகமது நபி, அகமதுல்லா ஓமர்சாய் பிரபலமானவர்கள்.

தற்போது, ரஷித் கான் அபுதாபியில் டி10 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார். அங்கிருந்து ரஷித் கான் பேசியதாவது:

ஆப்கன் கிரிக்கெட்டின் வளர்ச்சி

ஐபிஎல் தொடரில் பல ஆப்கன் வீரர்கள் பலரும் தேர்வாகியுள்ளது ஆப்கனுக்கு நல்ல செய்தி. ஐபிஎல் உலகத்திலேயே மிகப்பெரிய கிரிக்கெட் தொடர். பல வீரர்கள் தங்களது சொந்த மண்ணுக்கு வருவது போன்றது இந்தத் தொடர். பலரும் தங்களுக்கான இடத்தை பிடிப்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறது. இது ஆப்கன் கிரிக்கெட்டின் வளர்ச்சியைக் குறிக்கிறது. தேர்வான அனைவரும் சிறப்பாக ஐபிஎல் தொடரை முடிக்க மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் இருக்கிறேன்.

டி10 தொடர் கடினமானது

டி10 தொடர் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் கடினமானது. பேட்டர்கள் அதிரடியாக ஆடுவதில் கவனமாக இருப்பார்கள். புதிய பந்தில் திருப்பத்தை ஏற்படுத்துவது கடினம். எப்படியாகினும் சரியான இடத்தில் பந்தினை வீசுவது முக்கியம். உங்களது சிறப்பான முயற்சியை அளிக்க வேண்டும்.

ஆடுகளத்தின் தன்மையும் எல்லைக் கோடுகளும் சிறிது நமக்கு உதவும். உங்களுக்கு திறமை இருந்தால் வெற்றி பெறலாம். சில நேரங்களில் பேட்டரை வீழ்த்த ஒரு நல்ல பந்து போதும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.