விராட் கோலிக்காக ஆர்சிபிக்கு ஆதரவளிக்கிறேன்: ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்!

விராட் கோலிக்காக ஆர்சிபிக்கு ஆதரவளிக்கிறேன் என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் டிம் வாட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் டிம் வாட்ஸுடன் விராட் கோலி.
ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் டிம் வாட்ஸுடன் விராட் கோலி.
Published on
Updated on
2 min read

விராட் கோலிக்காக ஆர்சிபிக்கு ஆதரவளிக்கிறேன் என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் டிம் வாட்ஸ் தெரிவித்துள்ளார்.

கான்பெராவில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்திற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஆஸ்திரேலிய பிரதமரைச் சந்தித்தனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்- கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

அதன்தொடர்ச்சியாக, வருகிற நவம்பர் 30 ஆம் தேதி பிரதமர் 11 அணிக்கு எதிராக இந்திய அணி இரண்டு நாள் பிங்க் பந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளன. அதனையொட்டி ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், இந்திய கிரிக்கெட் வீரர்களை வியாழக்கிழமை அழைத்து அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

பயிற்சி ஆட்டத்தைத்தொடர்ந்து வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி அடிலெய்ட் மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெறும் பகலிரவு ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அணி வீரர்கள் அனைவரையும், பிரதமர் அல்பானீஸிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பொறுப்பு கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் விராட் கோலி இருவருக்கும் பிரதமர் அல்பானீஸ் வாழ்த்து தெரிவித்தார்

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு பிரதமர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இந்த வாரம் மனுகா ஓவலில் பிரதமர் லெவன் அணிக்கு, இந்திய அணிக்கு எதிரான பெரிய சவால் உள்ளது” பதிவிட்டுள்ளார்.

இந்திய அணி வீரர்கள் தவிர்த்து ஜாக் எட்வர்ட்ஸ் தலைமையிலான பிரதமர் 11 அணி வீரர்களுக்கும் பிரதமர் அல்பானீஸ் அழைப்பு விடுத்திருந்தார்.

மேலும் இதுகுறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் டிம் வாட்ஸ் கூறுகையில், “ எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் வீரருக்கும் வழங்கக்கூடிய மரியாதையை நான் விராட் கோலிக்கு வழங்குகிறேன். அவர் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்க்கும் போது ஒரு ஆஸ்திரேலியரை போன்று இருக்கிறது. அவருக்காக நான் ஆர்சிபிக்கு ஆதரவளிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்தில் ரோஹித் சர்மாவும் சிறிது நேரம் உரையாற்றினார். அதில் இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான நட்புறவு குறித்து எடுத்துரைத்தார்.

கடந்த ஆண்டு அகமாதாபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது இந்தியா வந்திருந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து இரு நாட்டு வீரர்களையும் சந்தித்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com