அதிகம் ஊதியம் பெறும் ரிஷப் பந்த்! பட்டியலில் முதலிடத்தை இழந்த விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒரு ஆண்டில் அதிக வருவாய் ஈட்டுபவர்கள் வரிசையில் முதலிடத்தை இழந்தார் விராட் கோலி.
ரிஷப் பந்த் | விராட் கோலி
ரிஷப் பந்த் | விராட் கோலி
Published on
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒரு ஆண்டில் அதிகம் வருவாய் ஈட்டுபவர்கள் வரிசையில் முதலிடத்தை இழந்தார் விராட் கோலி.

ஐபிஎல் மெகா ஏலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜெட்டா நகரில் நவ.24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அதிக விலைக்குச் சென்றவர்களில் முதல் 5 இடங்களை இந்திய வீரர்கள் பிடித்து அசத்தினர்.

சதம் விளாசிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா; இலங்கைக்கு 516 ரன்கள் இலக்கு!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அதிகபட்சமாக சுமார் ரூ. 27 கோடிக்கு லக்னௌ அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஸ்ரேயாஸ் அய்யர் ரூ. 26.75 கோடிக்கும், வெங்கடேஸ் ஐயர் ரூ. 23.75 கோடிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

அவர்களைத் தொடர்ந்து இந்திய வீரர்களில் பெங்களூரு அணியால் விராட் கோலி ரூ.21 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர்!

இந்த நிலையில், இந்திய வீரர்களில் அதிகம் ஊதியம் பெறும் வீரர்கள் வரிசையில் விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி ரிஷப் பந்த் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதன்படி, ஒரு வருடத்தில் ரூ.32 கோடி அவர் ஊதியம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அடுத்தபடியாக, விராட் கோலி ரூ.28 கோடியுடன் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ரிஷப் பந்த்துக்கு இருவிதமான வருவாய்களில், இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்தம் மற்றும் ஐபிஎல் ஒப்பந்தம் ஆகியவை உள்ளன. அவற்றில் பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஏ பிரிவு வீரர்களுக்கு வருடத்திற்கு ரூ.5 கோடியும், ஐபிஎல் ஊதியமாக ரூ.27 கோடியும் கிடைக்கும்.

விராட் கோலியின் சதத்தை தடுக்க தவறிய ஆஸ்திரேலியா; ஆலன் பார்டர் அதிருப்தி!

இந்திய வீரர் விராட் கோலிக்கு ஏ+ பிரிவில் ரூ.7 கோடியும், ஐபிஎல்லில் ரூ.21 கோடியும் ஊதியமாக பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் பிசிசிஐ புதிய ஒப்பந்தத்தை அறிவிக்கும் போது ரிஷப் பந்தின் ஊதியம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், அவர் ஏ+ பிரிவுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. அவர் மூன்றுவித வடிவங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் அவருக்கு ஊதியக் குறைப்பு செய்ய வாய்ப்புள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் இருவரும் ஏலத்தில் அதிக ஊதியம் பெறுபவர்களில் பட்டியலில் இருந்தாலும், சர்வதேச போட்டிகளில் விளையாடும் பட்சத்தில் அவர்களுக்கு ஊதிய அதிகரிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை; அணியில் 11 பேரும் பந்துவீச்சு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.