
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத புதிய முகங்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
காயத்தில் இருந்து மீண்ட பட்லர்
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணிக்கு காயத்தில் இருந்து மீண்ட பட்லர் தலைமைத் தாங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது.
காயத்தால் அவதிப்பட்ட இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் விளையாட முடியாததால் ஃபில் சால்ட் மற்றும் ஹாரி புரூக் இருவரும் இங்கிலாந்து அணியை வழிநடத்தினர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் 1-1 என்ற கணக்கில் சமன் செய்த இங்கிலாந்து ஒருநாள் தொடரை 2-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
புதுமுகங்களுக்கு வாய்ப்பு
23 முதல்தர டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சுழற்பந்து வீச்சாளர் ஜாபர் சோஹானுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஜான் டர்னர் மற்றும் டான் மௌஸ்லி இருவருக்கும் அணியின் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பங்குபெற்றிருந்தாலும், விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த இருவரும் ராவல்பிண்டியில் நடக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காண அணியிலும் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.
இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல், ஜாபர் சோஹன், சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், சாகிப் மஹ்மூத், டான் மௌஸ்லி, ஜேமி ஓவர்டன், அடில் ரஷித், ஃபில் சால்ட், ரீஸ் டாப்லி, ஜான் டர்னர்.
போட்டிகள் விவரம்
முதலாவது ஒருநாள் போட்டி: அக்டோபர் 31
2-வது ஒருநாள் போட்டி: நவம்பர் 2
3-வது ஒருநாள் போட்டி: நவம்பர் 6
முதலாவது டி20 போட்டி: நவம்பர் 9
2-வது டி20 போட்டி: நவம்பர் 10
3-வது டி20 போட்டி: நவம்பர் 14
4-வது டி20 போட்டி: நவம்பர் 16
5-வது டி20 போட்டி: நவம்பர் 17
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.