பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

அரையிறுதிப் போட்டியில் ஃபார்முக்குத் திரும்புவாரா ஜோஸ் பட்லர்?

இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ஜோஸ் பட்லர் அரையிறுதிப் போட்டியில் ஃபார்முக்குத் திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Jos buttler

ஜோஸ் பட்லர் - படம் | AP

Published On :

இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ஜோஸ் பட்லர் அரையிறுதிப் போட்டியில் ஃபார்முக்குத் திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 சுற்று நிறைவடைந்து, நாளை முதல் அரையிறுதிப் போட்டிகள் தொடங்குகின்றன.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நாளை (மார்ச் 4) நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நாளை மறுநாள் (மார்ச் 5) மும்பை வான்கடே திடலில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

ஃபார்முக்குத் திரும்புவாரா பட்லர்?

நடப்பு உலகக் கோப்பைத் தொடர் இங்கிலாந்து அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஜோஸ் பட்லருக்கு சிறப்பானதாக அமையவில்லை. ஐசிசியின் கடந்த நான்கு தொடர்களில் (2023 ஒருநாள் உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, 2026 டி20 உலகக் கோப்பை) அவர் ஒரு முறை மட்டுமே 50 ரன்களைக் கடந்துள்ளார்.

அதிரடியாக விளையாடக் கூடிய ஜோஸ் பட்லர் நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இதுவரையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இலங்கையின் மெதுவான ஆடுகளங்கள் அவரது பேட்டிங் ஸ்டைலுக்கு ஏற்றவாறு இல்லை என்பது அவரது சராசரியான ஆட்டத்துக்கான காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

இலங்கை ஆடுகளங்களில் விளையாடிய போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த ஜோஸ் பட்லர், மும்பை வான்கடே திடலில் நன்றாக விளயாடி ஓரளவுக்கு ரன்கள் குவித்திருக்கிறார். மும்பை வான்கடே திடலில் நாளை மறுநாள் இந்திய அணியை அரையிறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ள நிலையில், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஜோஸ் பட்லர் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இதுவரையிலான போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக சிறப்பாக விளையாடாவிட்டாலும், ஜோஸ் பட்லர் மீது இங்கிலாந்து அணி நிர்வாகம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. அரையிறுதிப் போட்டியில் ஜோஸ் பட்லரின் அனுபவம் அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என இங்கிலாந்து அணி நம்புகிறது. மீண்டும் ஃபார்முக்குத் திரும்பி இங்கிலாந்து அணியின் நம்பிக்கையை ஜோஸ் பட்லர் காப்பாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Summary

There is hope that England's wicketkeeper-batsman Jos Buttler will return to form in the semi-final.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.