வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றியைப் பெற்றது.
வங்கதேசத்தை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணியினர்.
வங்கதேசத்தை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணியினர்.
Updated on
2 min read

வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றியைப் பெற்றது.

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என முழுமையாக வென்றது.

டி20- தொடர்

இந்தநிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு குவாலியரில் உள்ள மைதானத்தில் தொடங்கியது. இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாகும்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதால் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் ஷுப்மன் கில், ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ், அக்சர் படேல் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

மயங்க் யாதவ், நித்திஷ் குமார் ஆகியோர் இந்தப் போட்டியில் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.

இந்தியா டாஸ்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 19.5 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மெஹதி ஹாசன் 35 ரன்களும், கேப்டன் ஷண்டோ 27 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

2021-ம் ஆண்டுக்கு பின்னர் இந்திய அணிக்குத் திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், ஹார்திக், மயாங் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்தியா வெற்றி

20 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்தால் வெற்றி எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 1 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரியுடன் 16 ரன்களுக்கு தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். அடுத்துவந்த இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவும் அதிரடியைத் தொடர ஸ்கோர் எகிறியது. சூர்யகுமார் யாதவ் 29 ரன்களுக்கு (3 சிக்ஸர்கள், 2 பவுண்டரி) வெளியேறினார். நிதானமாக ரன் சேகரிப்பில் ஈடுபட்ட விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனும் 29 (6 பவுண்டரி) அவுட்டானார்.

இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார். நிதீஷ் குமார் 16 ரன்களுடனும், ஹார்திக் பாண்டியா 39 ரன்களுடனும் (2 சிக்ஸர்கள், 5 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

11.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து இந்திய அணி 7 விக்கெட்டு வித்தியாசத்தில் முதல் வெற்றியைப் பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com