கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பாகிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தும் ஹாரி புரூக்.. 6 இன்னிங்ஸில் 4 சதங்கள்!

பாகிஸ்தானில் ஹாரி புரூக் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

News image

ஹாரி புரூக்

Updated On :9 அக்டோபர் 2024, 5:51 pm IST

இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் பாகிஸ்தானில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 556 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அடுத்து தனது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 97 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணித் தரப்பில் ஜோ ரூட் 172* ரன்களும், ஹாரி புரூக் 132* ரன்களும் எடுத்துள்ளனர்.

இங்கிலாந்து அணியின் ஒருநாள் தொடர் கேப்டனாக இருந்த 25 வயதான ஹாரி புரூக்கிற்கு இது 6-வது சதமாக அமைந்தது.

மேலும், பாகிஸ்தானில் இதுவரை இவர் 6 இன்னிங்ஸில் விளையாடியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக இவருக்கு 4 வது சதமாகவும் பதிவாகியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5-வது சதமாகும் அமைந்தது.

இந்திய வீரர் மொஹிந்தர் அமர்நாத் மற்றும் இலங்கையின் அரவிந்த டி சில்வா ஆகியோருக்குப் பிறகு பாகிஸ்தானில் நான்கு டெஸ்ட் சதங்களை அடித்த மூன்றாவது வெளி நாட்டு வீரர் என்ற பெருமையையும் ஹாரி புரூக் பெற்றார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஐந்து சதங்கள் அடித்த வீரர்கள்

  • கமிந்து மெண்டிஸ் (இலங்கை) - 5 சதங்கள் (13 இன்னிங்ஸ்)

  • டேரில் மிட்செல் (நியூசிலாந்து) - 5 சதங்கள் (35 இன்னிங்ஸ்)

  • அப்துல்லா ஷபிக் (பாகிஸ்தான்) - 5 சதங்கள் (37 இன்னிங்ஸ்)

  • ஷுப்மன் கில் (இந்தியா) - 5 சதங்கள் (50 இன்னிங்ஸ்)

  • டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) - 5 சதங்கள் (68 இன்னிங்ஸ்)

  • ஹாரி புரூக் (இங்கிலாந்து) - 5 சதங்கள் (26 இன்னிங்ஸ்)*

பாகிஸ்தானில் அதிக டெஸ்ட் சதம் அடித்த வெளிநாட்டு வீரர்

  • ஹாரி புரூக் (6 இன்னிங்ஸ்)* 

  • மொஹிந்தர் அமர்நாத் (18 இன்னிங்ஸ்) 

  • அரவிந்த டி சில்வா (17 இன்னிங்ஸ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.