மோசமான தோல்விக்கு காரணம் கூறிய பாகிஸ்தான் கேப்டன்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் தோல்வியுற்றதுக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் விளக்களித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத்
பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத்Anjum Naveed
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கேப்டன் ஷான் மசூத் முதல் இன்னிங்ஸில் 151 ரன்கள் எடுத்தார். பாக். அணி 556க்கு ஆல் அவுட்டானது. பின்னர், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை 823 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய பாக். 2ஆவது இன்னிங்ஸில் 220க்கு ஆல் அவுட்டானது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி 500 ரன்கள் அடித்தும் தோல்வியுற்றது இதுவே முதல்முறையாகும்.

இந்த மோசமான தோல்விக்கு பாகிஸ்தான் கேப்டன் கூறியதாவது:

மீண்டும் தோல்வியுற்றது வருத்தமளிக்கிறது. கடினமான உண்மை என்னவென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சிறந்த அணி வெற்றிபெற அதற்கான வழிகளைத் தேடும்.

எங்களது அணி மனதளவில் பலவீனமானதாக இருந்ததாக நான் நினைக்கவில்லை. ஆனால், இந்த ஆடுகளம் 3 நாள்களுக்குப் பிறகு உடையுமென எதிர்பார்த்தோம். அதனால்தான் நாங்கள் 3ஆம் நாளை அவ்வளவு நீட்டித்து விளையாடினோம்.

ஆனால், எப்படியாகினும் இறுதியாக நாங்கள் 20 விக்கெட்டுகளை எடுப்பதற்கான வழிகளை கண்டறிந்திருக்க வேண்டும். சமீபகாலமாக நாங்கள் இதைச் செய்யவில்லை.

ஆடுகளம் இரண்டு பக்கமும் சமமாகவே இருந்தது. முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்தால் 3,4ஆவது நாளில் சாதகமாக இருந்திருக்கும்.

2022க்குப் பிறகு தற்போதுதான் முல்தானில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுகிறோம். ஆடுகளத்தை மேம்படுத்தும் நபர்களுடம் பேச எங்களுக்கு போதியளவு வாய்ப்பு கிடைக்கவில்லை. அணியாக எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு தகவமைக்க தயாராக இருக்க வேண்டும்.

முந்தைய தவறுகளில் இருந்து பாகிஸ்தான் அணி எதையுமே கற்றுகொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் அதே தவறை செய்கிறது. நாங்கள் யார் ஒருவரையும் குறிப்பிட்டு குறை கூறமுடியாது. எல்லோரையும்தான் குறைகூற வேண்டும்.

நாங்கள் பேட்டிங் ஆட வந்த சமயம் 4ஆம் நாளில் ஆடுகளத்தில் சில இடங்களில் வெடிப்புகள் காணப்பட்டன. அது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவும் எங்களுக்கு பாதகமாகவும் அமைந்தன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com