
வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிக்காக ஷெஃபீல்டு ஷீல்டு போட்டியில் பந்துவீச மிட்செல் மார்ஷ் தயாராகி வருகிறார்.
கேமரூன் கிரீன் அறுவை சிகிச்சை காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். அதனால் அவருக்குப் பதிலாக மிட்செல் மார்ஷ் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 அணிக்கு கேப்டனாக இருக்கும் மிட்செல் மார்ஷ் கடந்த உலகக் கோப்பையில்கூட பந்துவீசாதது கேள்விக்குள்ளானது.
ஐபிஎல் போட்டியில் தசைப்பிடிப்பு காரணமாக பந்துவீசுவதில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கியிருக்கிறார். வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடும் மிட்செல் மார்ஷ் குயின்ஸ்லாண்ட்க்கு எதிரான போட்டியில் 13, 94 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிக்க: நாட்டைவிட குடும்பமே முக்கியம்: பாட் கம்மின்ஸ் அதிரடி!
ஸ்டீவ் ஸ்மித் நம்.4இல் விளையாடுவார் என்பதால் மிட்செல் மார்ஷ் தொடக்க வீரராக விளையாடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஷஸ் தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. அதில் பேசும்போது மிட்செல் மார்ஷ் கூறியதாவது:
உடல்நலம் நன்றாக இருக்கிறது. நான் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிக்காக அதிகமாக பந்துவீசவில்லை. முதல் டெஸ்ட் போட்டிக்காக என்னைத் தயார்படுத்தும் செயல்பாடுகளாக இதைப் பார்க்கிறேன்.
பந்துவீச தயார்...
ஆல்ரவுண்டரின் பங்கு மிகவும் முக்கியம். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் சிறிது ஓய்வு தேவைப்படும்போது எங்களின் பங்கு தேவைப்படும். அந்த 10 -13 ஓவர்கள் மிகவும் முக்கியமானது. பாட் கம்மின்ஸுக்கு தேவைப்படும் பட்சத்தில் நான் என்னால் முடிந்த அளவுக்கு பந்துவீசுவேன்.
போர்க்களம் என வந்துவிட்டால் நம்மால் முடிந்த அளவுக்கும் கேப்டனுக்கு தேவைப்படும் அளவுக்கும் பந்துவீசியே ஆக வேண்டும். அதனால், ஆல்ரவுண்டர்களின் பங்கு அதிகம். கடந்த சீசன்களில் எங்களது ஆல்ரவுண்டர்கள் 10-13 ஓவர்கள்தான் வீசியிருப்பார்கள். ஆனால், அந்த 10-13 ஓவர்களுமே மிகவும் முக்கியமானது.
கேமரூன் கிரீன் பற்றி...
கேமரூன் கிரீனுக்கு நடந்ததை கேள்விப்பட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். ஆஸ்திரேலியாவுக்காக விளையாடுவதில் அவருக்கு விருப்பம் அதிகம். அவரது குணம், விளையாடாமல் இருப்பது நிச்சயம் அவருக்கு கவலையை தருவதாக இருக்கும். ஆனால், அதை அவர் ஏற்றுக்கொண்டார். அதிலிருந்து மீண்டுவந்து சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.