
ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் இலங்கை உடனான டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா 98 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்க ஆஸ்திரேலியா 2ஆவது இடத்தில் இருக்கிறது.
அடுத்தாண்டு இலங்கையுடன் ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தப் போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைக்கு மிகவும் முக்கியமானது.
ஜனவரி கடைசி அல்லது பிப்ரவரி முதலில் பாட் கம்மின்ஸின் மனைவிக்கு 2ஆவது குழந்தை பிறக்க இருப்பதால் குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடிவெடுத்துள்ளார். அதனால் இலங்கை தொடரில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021இல் டி20 உலகக் கோப்பையன்று யுஏஇக்கு சென்ற பாட் கம்மின்ஸ் தனது மனைவையையும் 4 நாள்களுக்கு முன்பு பிறந்த அவரது ஆண் குழந்தையையும் கரோனா கட்டுப்பாடுகளால் மிகவும் மிஸ் செய்ததாகக் கூறியிருந்தார்.
கடந்த முறை இந்தியாவுடனான பார்டர் கவாஸ்கர் டிராபியில் 2ஆவது டெஸ்ட்டில் அவரது அம்மா புற்றுநோயினால் இறந்துவிட்டதால் நாடு திரும்பினார்.
இந்நிலையில் பாட் கம்மின்ஸ் நேர்காணலில் கூறியதாவது:
கடந்தமுறை எனது மகன் (ஆல்பி) பிறந்த சமயத்தில் அவனுடன் நேரம் செலவிட முடியவில்லை. அதனால் இந்தமுறை கூடுதலாக வீட்டுடன் இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.
இது ஒரு கடினமான சூழ்நிலைதான். இப்படித்தான் நடக்குமென யாரும் திட்டமிடமுடியாது. சரியான நாளை நம்மால் கணிக்க முடியாது.
குடும்பத்துக்கு முக்கியத்துவம் தரும் ஒருவர் பேட்டிங் ஆட முடியாது. நாங்கள் கிரிக்கெட்தான் விளையாடுகிறோம். இத்துடன் உலகம் முடிந்துவிடுவது இல்லை. அதனால், ஆஸ்திரேலியாவுக்கு நீண்டகாலம் வெற்றி பெற்ற அணியாக இருக்க போராடுவோம். அதனால், குடும்பத்தை மறந்து வெளி நாட்டுக்குச் சென்று விளையாடவேண்டிய அவசியமில்லை. குடும்பம் என்று வரும்போது நாங்கள் மிகவும் வெளிப்படையாக இருக்கிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.