
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகுவதாக தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சனின் தொடையில் தசை கிழிந்த காயம் குணமாகததால் புணேவில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக நடந்து வரும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
இந்தத் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற வியாழக்கிழமை (அக்டோபர் 24) தொடங்கிறது. கேன் வில்லியம்சன், சமீபத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்தார்.
இதுகுறித்து நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறுகையில், “கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து மீண்டிருந்தாலும், அவர் இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை. வரவிருக்கும் நாள்களில் காயம் மேலும் குணமடைந்து, மூன்றாவது டெஸ்டில் அவர் விளையாடுவார் என்று நம்புகிறோம்” என்றார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் மாதம் 1 ஆம் தேதி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடக்க இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.