பாகிஸ்தானின் மோசமான நிலை...! முன்னாள் கேப்டன் கூறும் அறிவுரை!

பாகிஸ்தான் அணி கடந்த 10 மாதங்களாக மிகவும் மோசமான பின்னடைவை சந்தித்து வருகிறது.
விக்கெட் இழந்த பாகிஸ்தான் வீரர்.
விக்கெட் இழந்த பாகிஸ்தான் வீரர். படம்: பாகிஸ்தான் கிரிக்கெட் /எக்ஸ்
Published on
Updated on
1 min read

இன்சமாம் உல் ஹக், வாஷிம் அக்ரம், ஷாகித் அப்ரிடி, சொயிப் மாலிக், வாக்கர் யூனிஸ் என பல ஜாம்பவான வீரர்களை கொண்டிருந்த பாகிஸ்தான் அணி தற்போது மிகவும் பரிதாபகரமான நிலையில் விளையாடி வருகிறது.

பலம் வாய்ந்த பாகிஸ்தான்

1992இல் முதல்முறையாக ஐசிசியின் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி 2009இல் டி20 உலகக் கோப்பையும் ஆசிய கோப்பையையும் (2012), ஐசிசி சாம்பியன் டிராபியையும் (2017) வென்று அசத்தியுள்ளது.

குறைந்தபட்சம் 150 போட்டிகளில் சர்வதேச டி20களில் அதிக வெற்றிகள் பெற்ற அணிகளில் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது.

வெற்றி சதவிகிதங்களில் ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் 4ஆம் இடங்களிலும் இருந்து வந்துள்ளது.

ஆனால், தற்போது, பாகிஸ்தான் அணி கடந்த 10 மாதங்களாக மிகவும் மோசமான பின்னடைவை சந்தித்து வருகிறது.

ஆஸ்திரேலியாவிடம் 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆகியிருந்த நிலையில் மீண்டும் வங்கதேசத்துக்கு எதிராக மீண்டும் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது.

விக்கெட் இழந்த பாகிஸ்தான் வீரர்.
வரலாற்று வெற்றி மகிழ்ச்சி...! கோப்பையுடன் உறங்கும் வங்கதேச கேப்டன்!

கடந்த 10 மாதங்களில் பாகிஸ்தான் நிலை

  • ஒருநாள் உலகக் கோப்பையில் குரூப் ஸ்டேஸ் சுற்றில் வெளியேறியது.

  • டி20 உலகக் கோப்பையிலும் குரூப் ஸ்டேஜ் சுற்றிலேயே வெளியேறியது.

  • தற்போது வங்கதேசத்திடம் தனது சொந்த மண்ணில் வரலாற்று தோல்வியை சந்தித்துள்ளது.

  • 7 டெஸ்ட் போட்டிகளில் 2இல் மட்டுமே வெற்றி பெற்று 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்து 19.05 புள்ளிகளுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 8ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

விக்கெட் இழந்த பாகிஸ்தான் வீரர்.
ராஜஸ்தான் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக ராகுல் திராவிட் நியமனம்!

வெற்றிக்கு என்ன செய்யலாம்?

இது குறித்து டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்தத் கூறியதவது:

கடைசி ஒரு வருடமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நடைபெறும் மாற்றங்கள், கேப்டன்சி மாற்றங்கள் என அனைத்தும் அணியின் வீரர்களையும் பாதித்துள்ளது.

சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளில்தான் நமது பலத்தை காட்ட முடியும். வீரர்கள் இன்னும் அதிகமாக ரன்கள் குவிக்க வேண்டும். மோசமான இந்த நிலையிலிருந்து வெளிவர மன பலம் வேண்டும் வீரர்களுக்கு.

சொந்த மண்ணிலேயே அமைதியை கடைப்பிடிக்கவில்லை எனில் வருங்காலம் கவலை தருவதாகவே இருக்கிறது.

சர்பராஸ் நவாஸ், இம்ரான் கான், வாஷிம் அக்ரம், வாக்கர் போல பந்துவீச்சாளர்கள் தற்போது இல்லை. சொந்த மண்ணில் வெற்றிபெற சுழல்பந்து வீச்சாளர்களை நம்பவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com