
மழை காரணமாக ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கிரேட்டர் நொய்டாவில் நேற்று (செப்டம்பர் 9) தொடங்கியது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் தாமதமாக தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர், முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், மழை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று வானம் தெளிவாக இருந்தபோதிலும், மைதானத்தில் ஈரப்பதம் அதிக அளவில் இருப்பதால் போட்டியை நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.