மிட்செல் மார்ஷ்
மிட்செல் மார்ஷ் கோப்புப் படம்

டி20 தொடரில் பந்து வீசுவேனா? கேப்டனும் ஆல்ரவுண்டருமான மிட்செல் மார்ஷ் பதில்!

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் ஆல்ரவுண்டருமான மிட்செல் மார்ஷ் தனது பந்துவீச்சு குறித்து பேசியுள்ளார்.
Published on

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்று (செப்.11) இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டி சௌத்தாம்டனில் நடைபெறுகிறது.

இதற்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து அறிவித்தது. அதில் பில் சால்ட், வில் ஜாக்ஸ், ஜோர்டான் காக்ஸ், லியம் லிவிங்ஸ்டன், ஜாகோப் பெத்தெல், சாம் கரண், ஜேமி ஓவர்டான், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், சாக்யூப் மஹ்முத் மற்றும் ரீஸ் டாப்ளே விளையாடுகிறார்கள்.

மிட்செல் மார்ஷ்
6,0,6,6,6: 37 வயதிலும் அதிரடி காட்டும் கைரன் பொல்லார்ட்! (விடியோ)

டி20 உலகக் கோப்பையில் மிட்செல் மார்ஷ் பந்துவீசவில்லை. சூப்பர் 8 சுற்றுடன் ஆஸி. வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்காட்லாந்து உடனான டி20 தொடரை ஆஸ்திரேலியா 3-0 என அபாரமாக வென்று அசத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெறவிருக்கும் டி20 போட்டியில் பந்து வீசுவது குறித்து ஆஸி. கேப்டனும் ஆல்ரவுண்டருமான மிட்செல் மார்ஷ் கூறியதாவது:

நான் இந்த டி20 தொடரில் அதிகமாக பந்துவீசமாட்டேன் என நினைக்கிறேன். ஏனெனில் எங்கள் அணியில் பல விதமான வகையில் பந்துவீசும் வீரர்கள் இருக்கிறார்கள். நான் பந்துவீசுவேனா இல்லையா என்பது பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். நான் எப்போதும் எதையாவது ஒன்றை உருவாக்கவே விரும்புகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com