இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 12) அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
படம் | ஐசிசி
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 12) அறிவித்துள்ளது.

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 12) அறிவித்துள்ளது.

ஜேக்கர் அலி

காயம் காரணமாக வேகப் பந்துவீச்சாளர் ஷோரிஃபுல் இஸ்லாம் அணியில் சேர்க்கப்படாத நிலையில், அவருக்குப் பதிலாக அறிமுக வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜேக்கர் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜேக்கர் அலி வங்கதேச அணிக்காக 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கவுள்ளார்.

49 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள ஜேக்கர் அலி 2,862 ரன்கள் குவித்துள்ளார். அதில் 4 சதங்கள் மற்றும் 19 அரைசதங்கள் அடங்கும். அவரது சராசரி 41.47 ஆகும்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி விவரம்

நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), ஸாத்மன் இஸ்லாம், ஸாகிர் ஹாசன், மோமினுல் ஹேக், முஸ்பிகூர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹாசன் மிராஸ், ஜேக்கர் அலி, டஸ்கின் அகமது, ஹாசன் மஹ்முத், நஹித் ராணா, தைஜுல் இஸ்லாம், மஹ்முதுல் ஹாசன் ஜாய், நயீம் ஹாசன் மற்றும் காலித் அகமது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. வங்கதேசம் 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com