கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இந்திய வீரர் வீராட் கோலி முறியடிக்கவுள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிராக வருகின்ற 19-ஆம் தேதி டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள விராட் கோலி, வெறும் 58 ரன்கள் எடுத்தால் புதிய உலக சாதனை படைப்பார்.
என்ன சாதனை?
147 ஆண்டுகள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக குறைந்த போட்டிகளில்(623) 27,000 சர்வதேச ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார்.
இந்த நிலையில், இந்திய வீரர் விராட் கோலி, இதுவரை 591 போட்டிகளில் விளையாடி, 26,942 ரன்களை குவித்துள்ளார். இன்னும் 58 ரன்கள் எடுத்தால் போது சச்சினின் சாதனை முறியடிக்கப்படும்.
அடுத்து வரக்கூடிய 8 போட்டிகளில் 58 ரன்களை விராட் கோலி எடுக்கும் பட்சத்தில், கிரிக்கெட் வரலாற்றில் 600 போட்டிகளிலேயே 27,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார்.
சச்சின் டெண்டுல்கரை தவிர, ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் மற்றும் இலங்கையின் சங்ககரா ஆகியோர் சர்வதேச போட்டிகளில் 27,000 ரன்களை கடந்துள்ளார்கள்.
அதிக சதங்கள்
ஏற்கெனவே, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த சச்சின்(49) சாதனையை விராட் கோலி(50) முறியடித்துள்ளார்.
இருப்பினும், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சச்சின் 100 சதங்களை அடித்துள்ள நிலையில், இதுவரை விராட் கோலி 80 சதங்களை அடித்துள்ளார்.