இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதிலாக அணியின் விக்கெட் கீப்பர் ஃபில் சால்ட் அணியை வழிநடத்தினார்.
தி ஏஜஸ் பௌல் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் சால்ட் முதலில் பௌலிங் செய்வதாக அறிவித்தார்.
முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியாவில் டிராவிஸ் ஹெட் மற்றும் மேத்யூ ஷார்ட் இருவரும் இங்கிலாந்தின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.

டிராவிஸ் ஹெட் அதிரடி
ருத்ர தாண்டவம் ஆடிய டிராவிஸ் ஹெட், சாம் கரன் வீசிய 5 ஆவது ஓவரில் 3 பௌண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் விளாசி ஒரு ஓவரில் 30 ரன்கள் குவித்து அனைவரையும் வியக்கவைத்தார். டிராவிஸ் ஹெட் 23 பந்துகளில் 8 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பவர்பிளேயான 6 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் குவித்தது.
ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 250 ரன்களை தாண்டுவது போல தோன்றியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்ததும் அணியின் ரன் வேகம் குறைந்தது. மேத்யூ ஷார்ட் 4 பௌண்டரி மற்றும் 2 சிக்ஸருடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கேப்டன் மார்ஷ் 2 ரன்னிலும், விக்கெட் கீப்பர் இங்கிலிஸ் 37 ரன்னிலும், மார்க்ஸ் ஸ்டானிஸ் 10 ரன்னிலும், கிரீன் 13, சீன் அப்பார்ட் 4, ஆடம் ஸம்பா 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். டிம் டேவிட் மற்றும் சேவியர் பார்ட்லட் இருவரும் டக் ஆகினர்.
19.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் லிவிங்க்ஸ்டன் 3 விக்கெட்டும், ஆர்ச்சர், சகிப் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Travis Head's blistering 30-run over against Sam Curran sent the crowd into a frenzypic.twitter.com/4kL5wOse7q#TravisHead #SamCurran #T20I #ENGvsAUS #AUSvsENG
— six6slive (@six6slive) September 12, 2024
இங்கிலாந்து
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியால் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. ஃபில் சால்ட் 20 ரன்னிலும், வில் ஜாக்ஸ் 6 ரன்னிலும், ஜோர்டன் 17 ரன்னிலும், லிவிங்க்ஸ்டன் 37 ரன்னிலும், ஜேக்கப் பெத்தெல் 2 ரன்னிலும், சாம் கரன் 18 ரன்னிலும், ஜேமி ஓவெர்டொன் 15 ரன்னிலும், ஆர்ச்சர் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
19.2 ஓவர்களில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சீன் அப்பார்ட் 3 விக்கெட்டும், ஜோஷ் ஹேசல்வுட், ஆடம் ஸம்பா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலிய அணி வெற்றி
இதன் மூலம் 28 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

4-வது டி20: இங்கிலாந்து அபார வெற்றி; டி20 தொடரையும் வென்று அசத்தல்!

தோல்வியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்ற பென் ஸ்டோக்ஸ்!

வங்கதேசத்தை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

சூப்பர் ஓவரில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி இலங்கை அசத்தல் வெற்றி!
விடியோக்கள்

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3



