
சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் முதல் பெண் நடுவராக சலீமா இம்டியாஸ் தேர்வாகியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் நடுவராக இணைந்துள்ள சலீமா இம்டியாஸ் இனிவரும் காலங்களில் சர்வதேச மகளிர் இருதரப்பு தொடர் மற்றும் ஐசிசி மகளிர் தொடர்களில் நடுவராக செயல்படலாம்.
சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் முதல் பெண் நடுவராக தேர்வாகியுள்ள சலீமா இம்டியாஸுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
சர்வதேச நடுவராக தேர்வானவது குறித்து சலீமா இம்டியாஸ் பேசியதாவது: சர்வதேச கிரிக்கெட்டில் நடுவராக தேர்வாகியுள்ளது எனக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, கிரிக்கெட்டை நேசிக்கும் ஒவ்வொரு மகளிருக்கும், நடுவராக வேண்டும் என்ற கனவோடு உள்ள அனைவருக்குமான வெற்றி. என்னுடைய இந்த வெற்றி பாகிஸ்தானில் உள்ள எண்ணற்ற பெண்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும். கிரிக்கெட்டில் மகளிரின் முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்பட்டுள்ள போட்டிகளில் சலீமா இம்டியாஸ் நடுவராக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.