வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் ஷுப்மன் கில் இல்லையா?

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷுப்மன் கில்
ஷுப்மன் கில் படம் | பிசிசிஐ
Published on
Updated on
1 min read

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19 முதல் தொடங்குகிறது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு

இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து, வங்கதேச அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் வருகிற அக்டோபர் 7 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், இந்திய அணியின் துணைக் கேப்டனான ஷுப்மன் கில்லுக்கு வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வளிக்கப்படவுள்ளதாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டிகள் அக்டோபர் 7, அக்டோபர் 10 மற்றும் அக்டோபர் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்கிடையில் 3 நாள்கள் மட்டுமே இருப்பதால், டெஸ்ட் போட்டிகளைக் கருத்தில் கொண்டு ஷுப்மன் கில்லுக்கு ஓய்வளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு முக்கியத்துவம்

அடுத்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இதற்கிடையில், இந்திய அணி 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதேபோல அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரும் நடைபெறவுள்ளது. இந்த இரண்டையும் கருத்தில் கொண்டு இந்திய அணி தற்போது டி20 போட்டிகளைக் காட்டிலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் ஷுப்மன் கில்லை தவிர்த்து இந்திய அணியில் மேலும் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா மூவரும் ஓய்வை அறிவித்துவிட்டதால், அந்த இடங்களுக்கு பிசிசிஐ எந்த வீரர்களை தேர்வு செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com