ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஆஸி. தொடக்க ஆட்டக்காரர் புகழாரம்!

ரவிச்சந்திரன் அஸ்வினின் கிரிக்கெட் அறிவை மதிப்பதாக ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் (கோப்புப் படம்)
ரவிச்சந்திரன் அஸ்வின் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

ரவிச்சந்திரன் அஸ்வினின் கிரிக்கெட் அறிவை மதிப்பதாக ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் கோப்பை

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. கடந்த 2018-19 மற்றும் 2020-21 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர்களை இந்திய அணி தொடர்ச்சியாக கைப்பற்றி அசத்தியது. ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அஸ்வினுக்கு கவாஜா புகழாரம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரு அணிகளும் இந்த டெஸ்ட் தொடருக்காக தங்களை தீவிரமாக தயார் படுத்தி வருகின்றனர்.

உஸ்மான் கவாஜா
உஸ்மான் கவாஜா

இந்த நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வினின் கிரிக்கெட் அறிவை மதிப்பதாக ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரவிச்சந்திரன் அஸ்வின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர். அவரிடம் எப்போதும் திட்டங்கள் இருக்கும். ஆட்டத்தின் போக்கை நன்கு கணிக்கும் திறன் கொண்டவர். அவரது கிரிக்கெட் அறிவை நான் மிகவும் மதிக்கிறேன். பார்டர் - கவாஸ்கர் தொடரில் அவரது சவாலான பந்துவீச்சை எதிர்கொள்ள காத்திருக்கிறேன் என்றார்.

5-வது முறை

ஆஸ்திரேலியாவுக்கு 5-வது முறையாக ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் தொடருக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் கடந்த 2011-12, 2014-15, 2018-19 மற்றும் 2020-21 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியில் அங்கம் வகித்துள்ளார். ஆனால், கடந்த இரண்டு முறையும் அவருக்கு காயம் ஏற்படுவது சிறப்பாக செயல்பட தடையாக இருந்தது.

39 விக்கெட்டுகளுடன் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மூன்றாவது இந்திய பந்துவீச்சாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.