

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா இந்த சீசன் பிபிஎல் தொடரின் தனது முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தியுள்ளார்.
ஆஷஸ் டெஸ்ட்டுடன் தனது ஓய்வை அறிவித்த உஸ்மான் கவாஜா டி20 போட்டியில் சிறப்பாக விளையாடியது கவனத்தை ஈர்த்துள்ளது.
பாகிஸ்தானில் பிறந்த உஸ்மான் கவாஜா (39 வயது) ஆஸ்திரேலியாவின் சிறந்த தொடக்க வீரராக பல ஆண்டுகள் விளையாடி வந்தார்.
தனது கடைசி டெஸ்ட்டில் பேட்டின் நுனியில் பந்து பட்டு ஆட்டமிழந்தார். பெவிலியன் செல்லும்போது களத்தில் முத்தமிட்டு தனது நன்றியைத் தெரிவித்தார்.
தற்போது, பிபிஎல் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக கேப்டனாக விளையாடுகிறார்.
சிட்னி தண்டர் அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் அந்த அணி 180/6 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் டேவிர் வார்னர் 82 ரன்கள் குவித்தார்.
அடுத்து விளையாடிய, பிரிஸ்பேன் ஹீட் அணி 16.2 ஓவர்களில் 183/3 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த அணியில் கேப்டன் உஸ்மான் கவாஜா அதிகபட்சமாக 78 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்த வெற்றியுடன் பிரிஸ்பேன் ஹீட் 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்துக்குச் சென்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.