இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸி. அணியில் இருவர் புதிதாக சேர்ப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இரண்டு வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸி. அணியில் இருவர் புதிதாக சேர்ப்பு!
படம் | ஐசிசி
Published on
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இரண்டு வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் அண்மையில் நிறைவடைந்தது. டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

டி20 தொடர் நிறைவடைந்த நிலையில், ஒருநாள் தொடர் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி நாட்டிங்ஹமில் நடைபெறுகிறது.

இரண்டு வீரர்கள் சேர்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இரண்டு வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். கூப்பர் கன்னோலி கூடுதல் வீரராகவும், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மஹில் பியர்ட்மேன் ரிசர்வ் வீரராகவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

யு-19 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மஹில் பியர்ட்மேனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இறுதிப்போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர், 15 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களான சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், ரைலி மெரிடித் மற்றும் ஸ்பென்ஸர் ஜான்சன் ஆகியோர் காயம் காரணமாக ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெறவில்லை. இந்த சூழலில் தற்போது கன்னோலி மற்றும் பியர்ட்மேன் இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸி. அணி விவரம்

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அப்பாட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கன்னோலி, பென் துவார்ஷுயிஸ், ஜேக் ஃபிரேசர் மெக்கர்க், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஸ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், மார்னஷ் லபுஷேன், கிளன் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா மற்றும் மஹில் பியர்ட்மேன் (ரிசர்வ் வீரர்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com