புதிய சாதனை படைக்கவிருக்கும் யஸஷ்வி ஜெய்ஸ்வால்!

இந்திய கிரிக்கெட் வீரர் யஸஷ்வி ஜெய்ஸ்வால் புதிய சாதனை ஒன்றை படைக்கவுள்ளார்.
யஸஷ்வி ஜெய்ஸ்வால்
யஸஷ்வி ஜெய்ஸ்வால்
Published on
Updated on
2 min read

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஸஷ்வி ஜெய்ஸ்வால் புதிய சாதனை ஒன்றை படைக்கவுள்ளார்.

இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற செப்டம்பர் 27 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் முன்னிலையில் இருக்கிறது.

புரூக், ஜாக்ஸ் அதிரடி: டக்வொர்த் லீவிஸில் ஆஸி.யை வென்றது இங்கிலாந்து!

இந்திய வீரர் அஸ்வின் 6 விக்கெட்களுடன் சதம் அடிக்க மற்றொருவரான ரவீந்திர ஜடேஜா 86 ரன்கள் விளாசினார். இரண்டாவது இன்னிங்ஸில் பந்த் மற்றும் கில் சிறப்பாக விளையாடி இருவரும் சதமடித்தனர்.

மற்ற வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் ஜெய்ஸ்வால் அடித்த அரைசதத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. இருப்பினும், ஜெய்ஸ்வால் கடந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் 700-க்கும் அதிகமான ரன்கள் அடித்து வியக்க வைத்தார். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஜெய்ஸ்வால் ஒரு வியக்கத்தக்க சாதனையைப் படைக்க வாய்ப்புள்ளது.

யஸஷ்வி ஜெய்ஸ்வால் இதுவரை இந்திய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் 13 இன்னிங்ஸில் 71.75 சராசரியுடன் 861 ரன்கள் அடித்துள்ளார். அதில் 2 அரைசதம், 3 சதம் மற்றும் 2 இரட்டைச்சதம் ஆகியவை அடங்கும்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசி.க்கு காத்திருக்கும் சவால்கள் என்ன? முன்னாள் வீரர் பதில்!

அந்த வகையில் இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் ஜெய்ஸ்வால் 7 டெஸ்ட்களில் 806 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். வருகிற 27 ஆம் தேதி நடக்கவிருக்கும் டெஸ்ட் போட்டியில் 194 ரன்கள் அடித்தால் குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்கள் அடித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.

இந்தாண்டு 11 டெஸ்ட்களில் விளையாடி 986 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்தில் இருக்கிறார்.

ஒரே இன்னிங்ஸில் 498 ரன்கள் அடித்து பள்ளி மாணவர் சாதனை!

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அதே அணியைத் தக்க வைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளது. இரண்டாவது டெஸ்டில் விளையாடும் லெவன் அணியில் இந்தியா சில மாற்றங்களைச் செய்யலாம்.

கான்பூரில் உள்ள சூழ்நிலைகள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை விளையாட வைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்தப் போட்டியில் ஓய்வு அளிக்கப்படலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது.

குறைந்த டெஸ்ட்களில் வீரர்கள் அடித்த ரன் விவரம்

  • ஜோ ரூட் -986 ரன்கள் (11போட்டிகள்)

  • யஷஸ்வி ஜெய்ஸ்வால் -806 ரன்கள் (7 போட்டிகள்)

  • குஷல் மெண்டிஸ் -761 ரன்கள் (6 போட்டிகள்)

  • ஆலி போப் -745 (11போட்டிகள்)

  • பென் டக்கெட் -707 (11போட்டிகள்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.