பிரபல வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் டி20, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
37 வயதாகும் ஷகிப் அல் ஹசன் 129 சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்காக விளையாடி 2,551 ரன்களும் 149 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
70 டெஸ்ட்டில் 4,600 ரன்களும் 242 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் ஷகிப் ஓவரில் அதிரடியாக ரன்கள் குவித்தார். அறுவைச் சிகிச்சை காரணமாக மோசமாக பந்துவிசீய ஷகிப் 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் ஷகிப் கூறியதாவது:
நான் எனது கடைசி டி20 கிரிக்கெட்டினை டி20 உலகக் கோப்பையில் விளையாடினேன். இது குறித்து நான் தேர்வுக்குழுவுடன் பேசியிருக்கிறேன். 2026 உலகக் கோப்பைக்கு இப்போதிருந்தே தயாராக வேண்டும். வங்கதேச கிரிக்கெட் வாரியம் சரியான் ஆள்களை தேர்வு செய்யுமென நம்புகிறேன்.
எனது கடைசி டெஸ்ட் போட்டியாக கான்பூரில் நடக்கும் போட்டியில் விளையாட ஆசைப்படுகிறேன். அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்தார்கள். என்னை வங்கதேசம் அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்கிறார்கள். அது நடக்காவிட்டால் கான்பூர் டெஸ்ட் எனது கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.