
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோவின் சாதனையை ஜேசன் ஹோல்டர் முறியடித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி புளோரிடாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தானை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மேற்கிந்தியத் தீவுகள் அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
பிராவோவின் சாதனை முறியடிப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முன்னாள் வீரர் டுவைன் பிராவோவின் சாதனையை ஹோல்டர் முறியடித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக டி20 போட்டிகளில் பிராவோ 78 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் வீழ்த்திய நான்கு விக்கெட்டுகளையும் சேர்த்து ஜேசன் ஹோல்டர், சர்வதேச டி20 போட்டிகளில் 81 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் அசத்திய ஜேசன் ஹோல்டருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Jason Holder has broken former player Dwayne Bravo's record for taking the most wickets in T20 Internationals.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.