
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை சமன் செய்தது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடி இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
23 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 396 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இரண்டாவது இன்னிங்ஸில் 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 367 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 10 ரன்களுக்கும் குறைவாக தேவைப்பட போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் கடைசி விக்கெட்டினை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்தியா தரப்பில் இரண்டாவது இன்னிங்ஸில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஷுப்மன் கில் மற்றும் ஹாரி ப்ரூக் இருவரும் தொடர் நாயகன்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதையும் படிக்க: டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஜேசன் ஹோல்டர்!
The Indian team won the final Test against England by a thrilling 6-run margin to level the Test series.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.