
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் குறித்து அஸ்வின் “பேசுவதற்கு முன்பு யோசிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இந்திய அணி கடைசி போட்டியை வென்று 2-2 எனத் தொடரை சமன்படுத்தியது.
நான்காவது போட்டியில் இந்திய அணியின் பேட்டர் ரிஷப் பந்த் காயமடைந்தார். அவருக்குப் பதிலாக மாற்றுவீரரைச் சேர்க்க ஸ்டோக்ஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.
கடைசி டெஸ்ட்டில் இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஓக்ஸுக்கு தோள் பட்டையில் காயம் ஏற்பட்டு வெளியேறினார். இது போட்டியில் முக்கியமான ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
ஸ்டோக்ஸ் யோசித்து பேச வேண்டும்
இந்நிலையில், அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் கூறியதாவது:
இந்தத் தொடரில் நடந்த ஒழுங்கின்மை குறித்து பேச நினைக்கிறேன்.
கர்மா உங்களுக்கு உடனடியாக பதில் தருமென தமிழில் சொல்வார்கள். நீங்கள் விதைப்பதைத்தான் அறுவடைச் செய்ய முடியும்.
நான் ஸ்டோக்ஸின் கிரிக்கெட் திறமைக்கு ரசிகன். ஆனால், அவர் பேசும்போது சற்று சிந்தித்துப் பேச வேண்டும்.
கை உடைந்தும் கிறிஸ் ஓக்ஸ் அவரால் முடிந்ததைச் செய்தார். அவருக்கு போட்டிக்கான விழிப்புணர்வு இருந்தது. அவருக்காக தலைவணங்குகிறேன்.
கர்மா உடனடியாக தாக்கும்
மைக்கேல் வாகனும் சப்ஸ்டியூட் வேண்டுமெனக் கூறினார். அணியின் வீரர்களுக்கு சிறிது இறக்கம் காட்டுங்கள்.
ஸ்டோக்ஸ் அவரது கருத்தைச் சொல்லலாம். ஆனால், அதற்காக மற்றதை நகைச்சுவை என்றும் முட்டாள்தனம் என்பதும் மரியாதையாக இருக்காது.
பேசுவதற்கு முன்பு ஸ்டோக்ஸ் யோசிக்க வேண்டும். இல்லையெனில் இப்படித்தான் கர்மா உடனடியாக உங்களைத் தாக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.