
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விலகவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடப்பு ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது.
டிஎன்பிஎல் தொடரில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கிலும் கலக்கியிருந்த அஸ்வினுக்கு 3-வது வரிசையில் பேட்டிங் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதனை ரவிச்சந்திரன் அஸ்வின் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. மேலும், அவரது பந்து வீச்சும் சுமாராகவே அமைந்தது. 9 போட்டிகளில் விளையாடிய அஸ்வின் 283 ரன்களும், 7 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தார்.
சரியாக சோபிக்காத உள்ளூர் வீரரான அஸ்வின் மீது விரக்தியடைந்த ரசிகர்கள் பலரும் அவர் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, தன்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிடுக்க கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிவந்த அஸ்வின், பின்னர் மெகா ஏலத்தில் சென்னை அணியில் இடம்பிடித்தார்.
இதேபோல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சனும் அவரது அணியில் இருந்து விடுவிடுக்க கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அவரை சென்னை அணிக்கு மாற்றிக்கொண்டு அவருக்குப் பதிலாக அஸ்வின் மற்றும் சாம் கரனை ராஜஸ்தான் அணியில் ஒப்பந்தம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இருப்பினும், இரு அணித் தரப்பிலும் இதுவரை எந்த அதிகாரபூர்வத் தகவலும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.