
டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பதிவு செய்து ஆஸ்திரேலிய அணி சாதனை படைத்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி டார்வினில் இன்று (ஆகஸ்ட் 10) நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
தொடர்ச்சியாக அதிக வெற்றிகள்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக 9 போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்பாக, கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஜூன் இடைவெளியில் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக 8 வெற்றிகள் பெற்றிருந்ததே ஆஸ்திரேலிய அணி இதுவரையில் தொடர்ச்சியாக பெற்றிருந்த அதிக வெற்றிகளாக இருந்தது வந்தது.
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை மறுநாள் (ஆகஸ்ட் 12) நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.