முதல் டி20: ஆஸி. 10 ஓவரில் 88 ரன்கள், 6 விக்கெட்டுகள்!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 குறித்து...
australai and south africa capatains
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன்கள். படம்: ஐசிசி
Published on
Updated on
1 min read

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20யில் ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் 88/6 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

முதல் டி20யில் டாஸ் வென்ற தெ.ஆ. அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதிரடியாக தொடங்கிய ஆஸி. அணி முதல் 6 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 70 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 13 பந்துகளில் 35 ரன்கள் குவித்தார்.

தென்னாப்பிரிக்க அணி சார்பில் ககிசோ ரபாடா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

தற்போது, ஆஸி. 10 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 88 ரன்கள் குவித்துள்ளது.

இங்லீஷ் 0, மேக்ஸ்வெல் 1, ஓவன் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து சொதப்பினார்கள்.

Summary

Australia have scored 88/6 in 10 overs in the first T20I against South Africa.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com