
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக, யாரும் எதிர்பாராத விதமாக இருவரும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற போதிலும், அவர்கள் இந்திய அணிக்காக தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளனர்.
சௌரவ் கங்குலி கூறுவதென்ன?
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் வடிவிலான போட்டிகளில் மிகவும் சிறப்பான சாதனைகள் படைத்திருப்பதாகவும், சிறப்பாக விளையாடும் வரை அவர்கள் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடலாம் என உணர்வதாகவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வு பெறப்போகிறார்களா என்பது எனக்குத் தெரியாது. அதனால், அந்த விஷயத்தில் என்னால் எதுவும் கூற முடியாது. அவர்கள் ஓய்வு பெறுவார்களா? மாட்டார்களா? எனக் கூறுவது மிகவும் கடினம்.
நன்றாக விளையாடுபவர்கள் அணிக்காக தொடர்ந்து விளையாடுவார்கள். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி நன்றாக விளையாடினால், அவர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். ஒருநாள் போட்டிகளில் இருவரும் நம்பமுடியாத அளவுக்கு சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ளனர் என்றார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடர் வருகிற அக்டோபர் 19 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.