ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 53 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டி20 போட்டி டார்வினில் இன்று (ஆகஸ்ட் 12) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்க அணி முதலில் விளையாடியது.
டெவால்டு பிரேவிஸ் சதம் விளாசல்
முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்தது.
தென்னாப்பிரிக்க அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் டெவால்டு பிரேவிஸ் சதம் விளாசி அசத்தினார். அவர் 56 பந்துகளில் 125 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 31 ரன்களும், கேப்டன் அய்டன் மார்க்ரம் 18 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் பென் துவார்ஷூயிஸ் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ஆடம் ஸாம்பா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
தென்னாப்பிரிக்கா அபார வெற்றி
219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 17.4 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், தென்னாப்பிரிக்க அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணியில் அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் அதிகபட்சமாக 24 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அலெக்ஸ் கேரி 26 ரன்களும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 22 ரன்களும் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் கார்பின் போஸ்ச் மற்றும் குவெனா மபாகா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ககிசோ ரபாடா, அய்டன் மார்க்ரம், லுங்கி இங்கிடி, பீட்டர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசி அசத்திய டெவால்டு பிரேவிஸுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை தென்னாப்பிரிக்க அணி 1-1 என சமன் செய்துள்ளது. மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக 9 வெற்றிகளைப் பதிவு செய்து ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணியின் வெற்றிப் பயணத்துக்கு தென்னாப்பிரிக்க அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி வருகிற ஆகஸ்ட் 16 ஆம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஷுப்மன் கில்!
Summary
South Africa won the second T20I against Australia by 53 runs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல் ஒருநாள்: மே.இ.தீவுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!

அமெலியா கொ் அபாரம்; நியூஸிலாந்துக்கு 4-ஆவது வெற்றி

3-வது டி20: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

முதல் டி20 போட்டி: நியூசி.யை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை


