சிஎஸ்கேவின் செல்லப்பிள்ளை: டெவால்டு பிரெவிஸ் முதல் சதம்!

டெவால்டு பிரெவிஸ் தனது முதல் சதம் அடித்தது குறித்து...
டெவால்டு பிரீவிஸ் பகிர்ந்த புகைப்படங்கள்.
டெவால்டு பிரீவிஸ் பகிர்ந்த புகைப்படங்கள். படங்கள்: இன்ஸ்டா / டெவால்டு பிரீவிஸ்
Published on
Updated on
1 min read

தென்னாப்பிரிக்க வீரர் டெவால்டு பிரெவிஸ் தனது முதல் சர்வதேச டி20 சதத்தை நிறைவு செய்துள்ளார்.

ஆஸி.க்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 41 பந்தில் அதிரடியாக இந்தச் சதத்தை நிறைவு செய்தார்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில் பிரெவிஸ், ஸ்டப்ஸ் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்கள்.

ஸ்டப்ஸ் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பிரெவிஸ் 103 ரன்களுடன் விளையாடி வருகிறார்.

தெ.ஆ. அணியில் அதிவேகமாக சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். பேபி ஏபிடி என்பதனை நிரூபித்து வருகிறார்.

16.2 ஓவர்களில் தெ.ஆ. அணி 183/4 ரன்கள் எடுத்துள்ளது. தனியாளாக அணியை பிரெவிஸ் தூக்கி நிறுத்தினார்.

கடந்த சீசனில் சிஎஸ்கே அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்த பிரெவிஸுக்கு தென்னாப்பிரிக்க அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Summary

South African batsman Dewald Brevis has completed his maiden T20 international century.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com