
ஆஸி.க்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 218 ரன்கள் குவித்துள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தெ.ஆ. அணி 6.5 ஓவரில் 57/3 ரன்கள் எடுத்திருந்தது.
டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பிய நிலையில் பிரெவிஸ், ஸ்டப்ஸ் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்கள்.
ஸ்டப்ஸ் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பிரெவிஸ் 125 ரன்கள் எடுத்து அசத்தினார்.
56 பந்துகளில் 125 ரன்கள் எடுத்தார். இதில் 12 பவுன்டரிகள், 8 சிக்ஸர்கள் அடித்தார்.
தனியாளாக தென்னாப்பிரிக்க அணியை டெவால்டு பிரெவிஸ் தூக்கி நிறுத்தினார். இறுதியில் தெ.ஆ.அணி 218/7 ரன்கள் எடுத்தது.
கடந்த சீசனில் சிஎஸ்கே அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆஸி. அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல், த்வார்ஷியஸ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.