
டி20 உலகக் கோப்பை 2026-இல் பவர்பிளேவில் பந்துவீச மேக்ஸ்வெல் தயாராகி வருகிறார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த க்ளென் மேக்ஸ்வெல் (36 வயது) சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஆல்ரவுண்டராக இருக்கும் மேக்ஸ்வெல் டி20 போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பவர்பிளேவில் பந்துவீசி மார்கரம் விக்கெட்டை வீழ்த்தினார்.
முதல் போட்டியில் அபாரமான கேட்ச்சின் மூலம் போட்டியை வெல்ல காரணமாக அமைந்தார். இந்நிலையில், அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
துணைக்கண்டத்தில் விளையாடும்போது சுழல்பந்து வீச்சாளர்கள் போட்டியில் முன்னமே வந்து பந்துவீச வேண்டியிருக்கும்.
கடினமான காய்ந்த தரைகளில், புதிய பந்தில் நூல்கள் புதியதாக இருக்கும்போது ஸ்பின்னர்களுக்கு நல்ல கிரிப் (பிடிமானம்) கிடைக்கும். வரும் காலங்களில் இதைப் பயன்படுத்த ஆவலாக இருக்கிறோம்.
எனக்கு விக்கெட் எடுப்பது பிடிக்கும். யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் விக்கெட் எடுப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
பவர்பிளேவில் நான் செய்ய வேண்டிய வேலை இருந்தால் செய்வேன். என்னால் முடிந்ததை செய்கிறேன்.
பேட்டிங் வரிசையிலும் எங்கு வேண்டுமானாலும் விளையாட தயாராக இருக்கிறேன். தற்போதைக்கு, அணியில் இருக்கும் ஓட்டைகளை அடைக்க உதவுகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.