புச்சி பாபு தொடர்: மகாராஷ்டிர அணியில் ருதுராஜ், பிரித்வி ஷா!

புச்சி பாபு தொடருக்கான ஒரே அணியில் ருதுராஜ், பிரித்வி ஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...
ருதுராஜ் கெய்க்வாட்.
ருதுராஜ் கெய்க்வாட்.
Published on
Updated on
1 min read

புச்சி பாபு தொடருக்கான மகாராஷ்டிர அணியில் ருதுராஜ் கெய்க்வாட், பிரித்வி ஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் நடைபெறும் அகில இந்திய புச்சி பாபு கிரிக்கெட் போட்டிக்கான மகாராஷ்டிர அணியின் 17 பேர் கொண்ட அணியில் இந்திய பேட்ஸ்மேன்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பிரித்வி ஷா இருவரும் இடம் பெற்றனர்.

சென்னையில் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 9 வரை புச்சி பாபு தொடர் நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான மகாராஷ்டிர அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அணியின் கேப்டனாக அங்கித் பவானே நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை அணியில் இருந்து வெளியேறிய பிரித்வி ஷா மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் மும்பை அணியுடன் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய 25 வயதான அவர், உடற்தகுதி மற்றும் ஒழுக்கம் காரணமாக நீக்கப்பட்டார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியா ஏ மற்றும் இந்தியா இடையேயான பயிற்சி போட்டிகளில் பங்கேற்ற ருதுராஜ் கெய்க்வாட் இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆவலுடன் உள்ளார்.

அதேவேளையில், துலீப் டிராபிக்காக பெங்களூருவில் உள்ள மேற்கு மண்டல அணியில் விளையாட வேண்டியிருப்பதால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் விக்கெட் கீப்பர் சௌரப் நவாலே இருவரும் ஒரு ஆட்டத்தில் விளையாடிய பின்னர், தொடரில் இருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணி விவரம்

அங்கித் பவானே (கேப்டம்), ருதுராஜ் கெய்க்வாட், பிருத்வி ஷா, சித்தேஷ் வீர், சச்சின் தாஸ், அர்ஷின் குல்கர்னி, ஹர்ஷல் கேட், சித்தார்த் மத்ரே, சௌரப் நாவலே (விக்கெட் கீப்பர்), மந்தர் பண்டாரி (விக்கெட் கீப்பர்), ராமகிருஷ்ண கோஷ், முகேஷ் சௌத்ரி, பிரதீப் தாதே, விக்கி ஒஸ்ட்வால், ஹிதேஷ் வாலுஞ், பிரசாந்த் சோலங்கி, ரவிந்திரன் ஹங்கர்கேகர்.

Summary

Ruturaj Gaikwad, Prithvi Shaw included in Maharashtra squad for Buchi Babu tournament

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com