
தென்னாப்பிரிக்கா உடனான 3-ஆவது மற்றும் கடைசி டி20யில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஆஸி.க்கு சுற்றுப் பயணம் செய்துள்ள தெ.ஆ. 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இரண்டு டி20 போட்டிகளில் 1-1 என சமநிலையில் இருப்பதால் கடைசி டி20 போட்டியில் இரு அணிகளுமே மாற்றங்கள் செய்துள்ளன.
குறிப்பாக, தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி. அணி 3 மாற்றங்களைச் செய்துள்ளது.
ஆஸி. அணியில் 3 மாற்றங்கள்: இங்லீஷ், ஆரோன் ஆர்டி, நாதன் எல்லீஸ் இணைந்துள்ளார்கள்.
தெ.ஆ. அணியில் ஒரு மாற்றம்: செனுரன் முத்துசாமி இணைந்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி 5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் எடுத்துள்ளது.
ரியான் ரிக்கல்டன், டெவால்டு பிரெவிஸ் விளையாடி வருகிறார்கள்.
அதிரடியாக விளையாடிய லுஹான் டி பிரிட்டோரியஸ் 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து எல்லீஸ் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.