
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாப் சிம்சன் 89 வயதில் காலமானார்.
257 முதல்தர கிரிக்கெட்டில் 21,029 ரன்களை குவித்த இவர் ஆஸ்திரேலியாவின் தேசிய அணிக்காக 62 டெஸ்ட் போட்டிகளில் 4,869 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆல் ரவுண்டரான இவர் 71 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். கேப்டனாகவும் வர்ணனையாளராகவும் இருந்த இவர் கவுண்டி கிரிக்கெட்டில் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
சிட்னியில் 1936-இல் பிறந்த இவர் தன் வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட்டுக்காக அற்பணித்துள்ளார்.
இவரது மறைவுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
உண்மையான கிரிக்கெட் லெஜெண்ட் இறந்துவிட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டர், கேப்டன், பயிற்சியாளர், தேசிய அணித் தேர்வாளர் - பாப் சிம்சன் ஆஸி. கிரிக்கெட்டில் மிகப்பெரிய நட்சத்திரம்.
அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையும் கிரிக்கெட்டுக்கென அற்பணித்தவர். பாப் குடும்பத்தினருக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா தங்களது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது எனக் குறிப்பிட்டுள்ளது.
இவர் விளையாடிய காலத்தில் ஆஸி. அணி உலகக் கோப்பையை வென்றுள்ளது. ஆஷஸ் தொடர், பிராங்க் வொரெல் தொடரையும் ஆஸி. தக்கவைத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.